அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை… வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை

0
11

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நாளைய தினம் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்iயில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

 

அதேநேரம், நாளை முற்பகல் 9 மணி முதல் நாளை மறுதினம் 9 வரையான காலப்பகுதியில் நாட்டை சூழ உள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

இதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த காலப்பகுதியில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.