அண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்

0
11

சாம் கர்ரன் சிறப்பாக பந்து வீசிய நிலையில, டாம் கர்ரன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறித்து சஞ்சு சாம்சன் நகைச்சுவையான கருத்தை பகிர்ந்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் சாம் கர்ரன் விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது அண்ணன் டாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 32 பந்தில் 74 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 200 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் குவித்தாலும், சாம் கர்ரன் நேர்த்தியாக பந்து வீசி 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதேவேளையில் டாம் கர்ரன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
தம்பி ரன் விட்டுக்கொடுக்காத நிலையில் அண்ணன் அதிக ரன்கள் கொடுத்தார். இந்நிலையில் ரன்னை கட்டுப்படுத்தும் ரகசியத்தை அண்ணனுக்கு தம்பி வெளிப்படுத்தவில்லை என்று சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக தெரிவித்தார்.
‘‘டாம் கர்ரனிடம் கேட்டபோது என்னிடம் அவரது சகோதரரிடம் இருந்து எந்த டிப்ஸும் பெற்றதாக தெரிவிக்கவில்லை. அவர் எனக்கு எந்த சைகையும் கொடுக்கவில்லை. நானாகவே கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று’’ என்றார்.