அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

0
16

மஹரகம – வத்தேகெதர சந்திப்பில், சிறிய ரக மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

வத்தேகெதர சந்திப்பில் உள்ள மரம் ஒன்றில், இன்று அதிகாலை குறித்த மகிழுந்து மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது, மகிழுந்தில் பயணித்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.