அதிகாலை வேளையில் திருமணம் செய்து வைத்தமையால் இளைஞன் தற்கொலை… அதிர வைக்கும் காரணம்

0
160

முருகக் கடவுளை நிந்தித்த கறுப்பர் கூட்டத்துக்கு மரண அடி கொடுக்கும் ஈழத்து இளைஞன் (வீடியோ)

கம்பளை பகுதியில் திருமணம் செய்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞனை நள்ளிரவு 12 மணியவில் அழைத்து சென்ற குடும்பத்தினர் அதிகாலை 3 மணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞன் காலை நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடிப்படையான கொண்டு கம்பளை, உலபன பிரதேசத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 18 வயதுடைய யுவதியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுத்தியுள்ளார். இதனால் யுவதி கர்ப்பமடையுள்ளதாக கூறி அதிகாலையில் அந்த யுவதியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த அன்றைய தினம் காலை 9 மணியளவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு திருமணம் செய்து வைத்தமையினால் மனவருத்தமடைந்து இளைஞன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.