”அதெல்லாம் அடிக்க மாட்டான்.. கூகிளியே போடு” மைதானத்தில் தமிழில் தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்தி, வருண் சக்ரவர்த்தி…

  0
  378

  நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் சக தமிழக வீரரிடம் தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. நேற்று ராஜஸ்தான் வீரர்களின் விக்கெட்டை எடுக்க தினேஷ் கார்த்திக் போட்ட திட்டம் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ராஜஸ்தானுக்கும், கொல்கத்தா அணிக்கும் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு முன்பாக வெளியான கணிப்புகளில் கண்டிப்பாக ராஜஸ்தான் அணிதான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளை தவிடு பொடியாக்கி கொல்கத்தா வென்றது. கொல்கத்தாவின் வெற்றிக்கு தினேஷ் கார்த்திக்கின் சரியான திட்டமிடல் மற்றும் கொல்கத்தாவின் பவுலிங் பலம் இரண்டும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

  நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பாக இளம் வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் எல்லோரும் வரிசையாக அவுட்டானார்கள். அதன்பின் இயான் மோர்கன் 34 ரன்கள் எடுத்தார். கொல்கத்தாவில் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மோசமாக ஆடினார்கள்.

  ஆனால் அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். முதலில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 21 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா என்று வரிசையாக எல்லோரும் கொல்கத்தா பவுலர்களிடம் விக்கெட்டுகளை இழந்தனர்.

  முக்கியமாக கொல்கத்தாவின் இளம் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். மூன்று பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இவர்கள் மூவரும் மொத்தமாக் 58 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். அதிலும் வருண் சக்ரவர்த்தி போட்ட லெக் பிரேக் கூக்ளி பந்துகள் ராஜஸ்தான் வீரர்களை திணற வைத்தது.

  இந்த நிலையில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா நேற்றைய போட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைத்து ஆட தொடங்கினார். இவரை கடைசி வரை விட்டால், கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து போட்டியை மாற்றிவிடுவார். இதனால் இவரின் விக்கெட்டை எடுக்க தினேஷ் கார்த்திக் தீவிரம் காட்டினார். கடந்த போட்டியில் இவர் லெக் பிரேக் பவுலர்களிடம் திணறியதால்.. சரியாக ராகுல் திவாதியா வந்ததும் வருண் சக்ரவர்த்தியிடம் பவுலிங் கொடுத்தார்.

  வருண் சக்ரவர்த்தி வீசிய 11வது ஓவரில், தினேஷ் கார்த்திக் அவரிடம் கூக்ளி வீசும்படி தமிழில் கூறினார். இது அப்படியே மைக்கில் பதிவானது… அதற்கு வருண் சக்ரவர்த்தி ”ராகுல் திவாதியா அந்த பந்தை சுற்றி அடித்துவிடுவார்” என்பது போல கூறினார். இதற்கு உடனே தினேஷ் கார்த்திக் ”அதெல்லாம் அடிக்க மாட்டான்.. கூகிளியே போடு” என்று குறிப்பிட்டார்.

  வருண் சக்ரவர்த்தி வீசிய 11வது ஓவரில், தினேஷ் கார்த்திக் அவரிடம் கூக்ளி வீசும்படி தமிழில் கூறினார். இது அப்படியே மைக்கில் பதிவானது… அதற்கு வருண் சக்ரவர்த்தி ”ராகுல் திவாதியா அந்த பந்தை சுற்றி அடித்துவிடுவார்” என்பது போல கூறினார். இதற்கு உடனே தினேஷ் கார்த்திக் ”அதெல்லாம் அடிக்க மாட்டான்.. கூகிளியே போடு” என்று குறிப்பிட்டார்.