அனைத்து மாணவர்களும் கட்டாயமாக இதை செய்ய வேண்டும் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
22

அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதையும் கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது.

பாடசாலைகளில் சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட வேண்டும் என்பதால் முகக் கவசம் அணிவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் வலியுறுத்தினார்.