அரச ஊழியர்களின் எதிர்காலம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

0
19

அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் கடமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் யுகம் மீண்டும் உருவாக இடமளிக்க போலதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தமது ஆட்சி காலத்திலேயே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதன் காரணமாகவே கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தாகவும், அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சியால் உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.

யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாக தெரிவித்த பிரதமர், கடந்த அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையற்ற அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.