அரச ஊழியர்களுக்கு அமைச்சு வெளியிடஅறிக்கை

0
33

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சினால் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனாவை கட்டுப்படுத்துவவதற்கு அரச நிறுவன பிரதானிகளால் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் உள்ளடங்கிய ஜனாதிபதியின் செயலாளரினால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகாரிகளை பணிக்கு அழைத்தல் மற்றும் நிறுவனங்களை நடத்தி செல்லுதலின் போது அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது