அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே தடைசெய்யப்பட்டது வாட்ஸ் ஆப்பின் புதிய வசதி

  0
  14

  கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து வாட்ஸ் ஆப்பின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையினை அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் முயன்று வருகின்றது.

  எனினும் அந்நாட்டின் பணப்பரிமாற்ற சட்டங்களில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக அனுமதி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.

  இதற்கிடையில் வாட்ஸ் ஆப்பின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையான பிரேஸிலில் குறித்த வசதியானது கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

  எனினும் பிரேஸிலின் மத்திய வங்கியானது குறித்த சேவைக்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.

  இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கி கட்டண முறை சந்தையில் போட்டியை உறுதி செய்வதற்கான முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளது.

  இக் காலப் பகுதியில் குறித்த கட்டண முறையின் உட்கட்டுமானங்கள் தொடர்பில் மத்திய வங்கி மதிப்பீடு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.