அள்ளி கொடுக்கப்போகும் சனி… இந்த ராசியினருக்கு ராஜயோகம்தான்…மத்தவங்க கொஞ்சம் ஜாக்கிரதை…!

0
5723

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் ஆரம்பமாகிறது. ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்றிருந்த சுக்கிரன் மிதுனம் ராசிக்கு நகர்ந்து ராகு உடன் இணைகிறார்.

இந்த வாரம் ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சல் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி நிறைய நன்மைகளை செய்யப்போகிறது. மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு உடன் கூட்டணி சேருகிறார்.

இதுநாள்வரைக்கும் மூன்றாம் வீட்டில் ராகு உடன் இணைந்திருந்த புதன் நான்காம் வீட்டில் உள்ள சூரியனோடு கூட்டணி சேருகிறார். ஒன்பதாம் வீட்டில் கேது உடன் குரு, பத்தாம் வீட்டில் சனி, 12ஆம் வீட்டில் உங்க ராசிநாதன் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க பாக்ய ஸ்தானம் அற்புதமாக குரு சந்திர யோகம் பெற்றிருக்கிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும். அதன் மூலம் பொன் பொருள் சேரும். மனதில் சில சஞ்சலங்கள் இருந்தாலும் வார இறுதியில் அது சந்தோஷமாக மாறும். எதிர்மறை எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்.

இதுநாள் வரை என்னடா வாழ்க்கை என்று கவலைப்பட்டு வந்த உங்களுக்கு இனி நல்ல காலம்தான் வெற்றி நடை போடுங்க. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வார இறுதியில் நல்ல செய்தி தேடி வரும்.

வரன் பேசி முடிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை பற்றிய தகவல்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது பெரியவர்களின் ஆலோசனை அவசியம் தேவை. இல்லத்தரசிகளுக்கு இது இனிமையான வாரம் வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். வீட்டுக்காரர்கள் தங்க நகை வாங்கிக்கொடுப்பார் வாங்கிக்கங்க.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த வாரம் உங்களின் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும், மதிப்பு மரியாதை கூடும். அன்னதானம் பண்ணுங்க. சிவப்பு நிற ஆடைகளை பயன்படுத்துங்கள். நல்லது நிறைய நடக்கும்.

ரிஷபம்
தன்னம்பிக்கையோடு அணுகும் ரிஷபம் ராசிக்காரர்களே, எதுவந்தாலும் பாத்துக்கலாம்னு நினைக்கிற உங்களுக்கு இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு உடன் இணைகிறார்.

புதன், மூன்றாம் வீட்டில் உள்ள சூரியன் உடன் கூட்டணி சேருகிறார். எட்டாம் வீட்டில் குரு, கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் ஆரம்பத்திலேயே சாதகமாக இல்லை ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு 12.56 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். இந்த வாரம் உங்களின் வார்த்தைகளில் இனிமை கூடும்.

உங்க பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். உங்க ராசிநாதனால் நிறைய பண வரவு வரப்போகிறது. வரப்போகிற மகாலட்சுமியை வரவேற்று பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த வாரம் சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் வரலாம் கவலைப்படாதீங்க நடந்தது நன்மைக்கு தான்னு நினைங்க. பெரிய மாற்றங்கள் நடக்கப்போகிறது.

வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க மருத்துவ செலவுகள் வரலாம். வியாபாரத்தில பெரிய அளவில லாபம் கிடைக்கும் எதிர்பார்க்க முடியாது சரியான நேரத்திற்காக காத்திருங்க. இல்லத்தரசிகள் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பேசுங்க காரணம் உங்க பேச்சு உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கு கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. திடீர் வெற்றிகள் வந்து திக்குமுக்காட வைக்கும். வெள்ளிக்கிழமை

மகாலட்சுமியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
எதையும் புத்திசாலித்தனத்தோடும் நிதானத்தோடும் எதிர்கொள்ளும் மிதுனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுடைய ராசியில் சுக்கிரன் ராகு, இரண்டாம் வீட்டில் சூரியன்,புதன்,பத்தாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் குரு, கேது, எட்டில் சனி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. ஆகஸ்ட் 02ஆம் தேதி நள்ளிரவு 12.56 மணி முதல் ஆகஸ்ட் 04 இரவு 08.47 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. பேச்சில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் உங்களுக்கு அவமானங்கள் வந்து சேரும்.

எதிர்பாலினத்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்க. உங்க பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அவங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கமிஷன் வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த வாரம் சில சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும். வீட்டில் பேசும் போது கவனமாக இருங்க. திடீர் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு அதனால திடீர் மருத்துவ செலவுகள் வாரலாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. தேவையில்லாத விசயங்களை கவனம் செலுத்தாதீங்க.

உயர்கல்விக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆலோசனை அவசியம். தலை, கண் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம், தொழில் அதிபர்களுக்கு ரொம்பநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நல்ல செய்தி தேடி வரும்.கடந்த கால சந்தோஷங்கள் மீட்டெடுப்பீர்கள். சிவபெருமானை வணங்குங்க நிறைய நல்லது நடக்கும்.

கடகம்
அமைதியான குணம் கொண்ட அசாத்திய தன்னம்பிக்கை கொண்ட சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் சூரியன்,புதன், விரைய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், ஆறாம் வீட்டில் கேது,குரு, ஏழாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 08.47 மணி முதல் ஆகஸ்ட் 07 ஆம் தேதி காலை 6.57 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த வாரம் உங்க ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். எந்த காரியம் ஆரம்பித்தாலும் தடை வருதே என்று யோசிக்காதீங்க எல்லாம் நன்மைக்கே என்று நினைங்க.

பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த வாரம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் சில தடைகள் ஏற்படும் எச்சரிக்கையாக யோசித்து பண்ணுங்க தோல்வியை தவிர்க்கவும். வேலையில கவனமாகவும் எச்சரிக்கையாக இருங்க உங்க கூட வேலை செய்பவர்களே உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல், ஜாமீன் கையெழுத்து விசயங்களில் எச்சரிக்கையாக இருங்க. பாதிப்புகள் நீங்க தினசரி மாலையில் விளக்கேற்றி மகாலட்சுமி வணங்குங்கள்.

சிம்மம்
வீரமும் விவேகமும் நிறைந்த சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு,கேது, ஆறாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு வெற்றிகளும் நன்மைகளும் தேடி வரப்போகிறது.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சந்திர யோகம் இருக்கிறது. சின்னச் சின்ன சங்கடங்கள் வந்தாலும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் தேடி வரும். இத்தனை நாட்களாக வராத பணம் எல்லாம் வரும். உணவுல கவனமாக இருங்க இல்லாட்டி வயிறு பிரச்சினை வந்து மருத்துவ செலவு ஏற்படும். குடும்ப தலைவிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம், திடீர் செலவுகள் வரும்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு திடீர் லாபங்கள் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் பிடித்த காலேஜில் உங்க மனசுக்கு பிடித்த சப்ஜெக்ட் படிக்க வாய்ப்பு தேடி வரும்.

கன்னி
எதையும் அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளும் கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு நான்காம் வீட்டில் குரு,கேது, ஐந்தாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நல்ல செய்திகள் தேடி வரும், இத்தனை நாட்களாக எந்த வருமானமும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா? பணமழை பொழியப்போகிறது.

வாங்கிய கடன்களை செட்டில் செய்வீர்கள். வார்த்தைகளை கவனமாக பேசுங்க கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். காதலிப்பவர்களும் கவனமாக இருங்க பேச்சில் கவனமாக இல்லாவிட்டால் பிரிவு ஏற்படும்.

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புத்துணர்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். நிறைய முதலீடுகளை செய்து அகலக்கால் வைக்காதீங்க. கூட வேலை செய்பவர்களே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் கவனமாக இருங்க. யார் எதை சொன்னாலும் நம்பி இறங்கிடாதீங்க அப்புறம் சங்கடங்கள் ஏற்படலாம். நிறைய டென்சன் வந்தாலும் எதையும் சமாளித்து கூல் ஆக ஹேண்டில் பண்ணுங்க.

துலாம்
கலைத்திறமை அதிகம் நிறைந்த சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு,கேது, நான்காம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் ஸ்தானத்தில் சுக்கிரன்,ராகு, பத்தாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்களுக்கு திருமணம் சுப காரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் பற்றிய பேச்சுகளில் சில சிக்கல்கள் வரலாம் முடிவுகளை ஒத்திப்போடுங்க.

வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என்று ஆதங்கத்தை தரலாம். வார இறுதியில் நல்ல செய்திகள் தேடி வரும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வங்கிக்கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

திடீர் வீண் விரைய செலவுகள் வரலாம் கவனம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பேச்சில் நிதானம் தேவை இல்லாவிட்டால் சிக்கலாகி விடும். மாணவர்களுக்கு இந்த வாரம் உயர்கல்விக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். சொத்து பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒத்திப்போடுங்க. புதிய கடன்கள் எதுவும் வாங்க வேண்டாம். விநாயகரை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
வீரமான செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு,கேது, மூன்றாம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், எட்டாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

திருமணமான தம்பதியர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி தேடி வரும். பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் அதிகரிக்கும் பணம் விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்க.

எதையும் தெளிவாக யோசித்து முடிவு பண்ணுங்க. திருமணம் வரன் பார்க்கும் நல்ல நேரம் கை கூடி வருகிறது. பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. அவங்க எதிர்காலத்தை நினைத்து சங்கடப்படாதீங்க நல்ல நேரம் வரப்போகிறது. பெற்றவர்களுக்காக திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம்.

எதிர்பார்த்திருந்த தகவல் வரலையே என்று ஏக்கத்தோடு இருப்பீங்க அதற்காக அவசரப்படாதீங்க நல்ல செய்தி தேடி வரும். இளம் பெண்கள் எதிர்பாலின நட்புக்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குடும்ப தலைவிகளின் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். வார கடைசியில் நல்லது நிறைய நடக்கும்.

தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்குள் குரு,கேது, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஏழாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், எட்டாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகத்தை செய்வார். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை நீங்கி வருமானம் அதிகரிக்கும். திடீர் பணவரவுகள் வந்து திக்குமுக்காட வைக்கும். வீட்டில் வார்த்தைக்கு மதிப்பு மரியாதை கூடும் சந்தோஷம் அதிகம் நிறைந்த வாரமாக அமையப்போகிறது. இல்லத்தரசிகளுக்கு பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வார்த்தைகளில் கவனமாக இருங்க. பேசும் வார்த்தைகளே சிக்கலை ஏற்படுத்தி விடும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வந்து தட்டிப்போகுதே என்று கவலைப்படுவீங்க. இந்த வாரம் அவசரப்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்காதீங்க. காதலில் பிரிவு வரலாம் வார கடைசியில் சமாதானம் ஆகி விடுங்கள். பங்குச்சந்தையில் பணத்தை பெரிய அளவில் முதலீடு பண்ணாதீங்க. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்
எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் தனித்திறமை கொண்ட சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே,உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்குள் சனி, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் ஸ்தானத்தில் ராகு,சுக்கிரன், ஏழாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்களுடைய வாழ்க்கை துணையிடம் இருந்த சங்கடங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை தீரும். பணவரவு அதிகரிக்கும்.

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நிறைய நன்மைகள் நிறைந்த வாரமாக அமையப்போகிறது. சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் திடீர் லாபம் வரும்.

புதிய அளவில் பிசினஸ் மாற்றம் எதுவும் வேண்டாம். பெரிய அளவில் கடன் எதுவும் வாங்காதீர்கள் சிக்கலாகி விடும். வேலைக்காக எதுவும் முயற்சி செய்யாதீங்க இருக்கிற வேலையை கவனமாக பாருங்க. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் வரன் பார்க்கலாம். நல்ல செய்தி கிடைக்கும்.

அதே நேரம் காதலை சொல்ல இது நல்ல நேரமல்ல ஒத்திப்போடுங்க. மாணவர்கள் சோம்பேறித்தனம் பார்க்காமல் நல்லா படிங்க வெற்றி கிடைக்கும்.

கும்பம்
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் தைரியசாலியான கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு,கேது, ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு,சுக்கிரன், ஆறாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு நிறைய சாதகத்தை தரப்போகிறார்.

வியாபாரத்தில் நிறைய லாபம் வரும் பணவரவு தேடி வரும்.கடன்களை அடைப்பீர்கள். உங்க தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக முடிவு செய்வீர்கள்.

வார பிற்பகுதியில் திடீர் விரைய செலவுகள் தேடி வரலாம். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. இப்போது இருக்கிற லாக்டவுன் காலத்தில கவனமாக இருங்க. பணம், நகைகளை பத்திரமாக வைத்திருங்கள். அலுவலகத்தில் உங்களுடன் சண்டை போட்டவர்கள் கூட உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

இல்லத்தரசிகள் நிதானமாக பேசுங்க. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்சினை வரலாம். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மன திருப்தி நிறைந்த வாரமாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு அவசியம் பண்ணுங்க சஞ்சலங்கள் நீங்கும் சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்
எதையும் துணிச்சலோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகும் மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்குள் செவ்வாய், ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு,கேது, ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, நான்காம் வீட்டில் ராகு,சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் சூரியன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

உங்களுக்கு புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கிரகங்களின் பார்வை சஞ்சாரத்தினால் சில பிரச்சினைகள் வரும் என்பதால் பேச்சில் கவனமாக இருங்க. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் வரும் அதே போல திடீர் செலவுகள் வரலாம். இல்லத்தரசிகள் கவனமாக சிக்கனமாக செலவு பண்ணுங்க.

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு பதவியில் மாற்றமும் வருமானத்தில் ஏற்றமும் வரும். இல்லத்தரசிகள் நிதானமாக பேசுங்க. யோகா, தியானம் பழகுங்கள். மன குழப்பங்கள் நீங்க குல தெய்வ வழிபாடு அவசியம்.