ஆடு, மாடுகளைக் கூட விட்டுவைக்காத காம கொடூரன்… 65 வயது பாட்டியை சீரழித்த கொடூரம்

0
57

65 வயசு பாட்டி மீனாவை, கதற கதற பலாத்காரம் செய்துள்ளார் ராகுல் என்ற இளைஞர். இந்த இளைஞரை பற்றின ஒவ்வொரு செய்தியும் பகீரை கிளப்பும்படியாக உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பகுதி ஆரிகான்நகர்.. இங்கு வசித்து வந்தவர்தான் மீனா. 65 வயசாகிறது. கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. பக்கத்து கிராமத்தில் டீ கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இன்னொரு மகனுக்கு மனநிலை சரியில்லை. அதனால் கல்யாணமும் ஆகாததால், மீனாவுடன்தான் வசித்து வருகிறார்.

மீனா அதே பகுதியில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவர் ஒரு கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இரவு ஏற்கனவே மதுபோதையில் இருந்தவர், மறுபடியும் குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார்.

அதனால் இவர் தொல்லை பொறுக்க முடியாமல், அவரது குடும்பத்தினர் ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டனர்.

ஆனால் ராகுல், நடுராத்திரி 12 மணிக்கு அந்த ரூம் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே வந்துவிட்டார். பிறகு நேராக மீனா வீட்டிற்கு சென்றார். மண்டைக்கேறிய போதையில் மீனா வீட்டு கதவை தட்டினார்.

கதவை திறந்த மீனாவிடம் ஊறுகாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மீனா, இந்த நேரத்தில் கடையை திறக்க முடியாது என்றார்.

இதனால் போதையில் மீனாவிடம் சண்டை போட்டார் ராகுல். வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ராகுல், மீனா பாட்டியை வீட்டுக்குள் தள்ளி அவரை சரமாரியாக தாக்கினார். பிறகு பலாத்காரமும் செய்துவிட்டார்.. இதை பாட்டி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அதிர்ச்சி அடைந்த பாட்டி, ராகுலை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வெளியே ஓடிவந்துள்ளார். உறவினர்களுக்கும் ஊருக்கும் விஷயத்தை சொல்ல, அவர்கள் திரண்டு வந்து ராகுலை கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதற்குள் தகவலறிந்து ஜோலார்பேட்டை போலீசார் வந்துவிட்டனர். அவர்கள் ராகுலை கைது செய்தனர். அப்போதுதான், ராகுல், ஏற்கனவே நிறைய பெண்களை பலாத்காரம் செய்தவர் என்பதும், பல கொலை, கொள்ளை கேஸ்கள் இவர் மீது உள்ளதும் தெரியவந்தது.

இவர் எந்த பெண்ணாக இருந்தாலும் கற்பழித்துவிடுவாராம். அந்த சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள், இளம்பெண்கள், மூதாட்டிகள் என வயது பேதமின்றி பலாத்காரம் செய்துள்ளார் எனவும், இந்த ராகுலுக்கு பயந்து கொண்டே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

அது மட்டுமில்லை. ஆடு, மாடுகளைகூட ராகுல் விட்டு வைப்பதில்லையாம்.

நிறைய முறை ஜெயிலுக்கு போய் வந்தும் இவர் இப்படியேதான் இருக்கிறார். தொடர்ந்து அதேபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

அப்படித்தான் மீனா பாட்டி சிக்கி கொண்டார். இப்போது மறுபடியும் அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ராகுலை ஜெயிலில் வைத்துள்ளனர்.