இந்தவார ராசி பலன்கள் (7.9.2020- 13.9.2020)

0
25

சந்திரன், சூரியன், செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
அசுவினி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
பரணி: அரசு அதிகாரிகளின் உதவியால் சில செயல்களை முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகளை குறைப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
கார்த்திகை 1: தொழிலில் புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி வெல்வீர்கள். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.

புதன், சந்திரன் அனுகூல நிலையில் உள்ளனர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.
கார்த்திகை 2,3,4: எதிலும் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக ஈடுபாட்டின் மூலமாக மனநிம்மதி கிடைக்கும். பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.
ரோகிணி: சவாலான சூழ்நிலைகள் காரணமாக சமநிலை இழக்க நேரலாம். பொறுமையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. பணியில் திருப்தி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: அமைதியின்மை, பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். தன்னம்பிக்கை குறையக்கூடும். எடுத்த செயலில் வெற்றி பெற உற்சாகமாக முயற்சி செய்வீர்கள்.

செவ்வாய், சுக்கிரன், புதன் உதவும் நிலையில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபவாழ்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: உங்கள் அணுகுமுறையில் சிறிது கவனம் தேவை. பிரியமானவர்களுடன் பேசும் போது கவனமாகப் பேசவும். முக்கியமான முடிவுகளை இந்த வாரம் எடுக்காதீர்கள்.
திருவாதிரை: சவால்களைக் கையாள்வது கடினமாக இருக்காது. வளர்ச்சி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் மனநிலை காணப்படும். தொழில் வட்டாரத்தில் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
புனர்பூசம், 1,2,3: நன்மை, தீமை இரண்டும் கலந்து காணப்படும். உரையாடலின் போது கவனமாக இருங்கள். பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. அதைத் தவிர்ப்பது நல்லது.

சந்திரன், ராகு நன்மை செய்யும் நிலையில் உள்ளனர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
புனர்பூசம் 4: துணிச்சல் அதிகரிக்கும் வாரம். நட்பால் ஆதாயம் உண்டு. உடல் நலன் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தால் வீண் தகராறு ஏற்படலாம். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
பூசம்: தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க செலவை குறைப்பது அவசியம்.
ஆயில்யம்: பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

செவ்வாய், குரு, புதன் உதவிகரமான நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
மகம்: பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணியாளர்கள் அவசரப்பட்டுப் பேசாதிருப்பது நன்மையை தரும்.
பூரம்: எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சாதுர்யமான பேச்சினால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
உத்திரம் 1: சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட நேரிடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

குரு, புதன், சந்திரன் நல்ல நிலையில் உள்ளனர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
உத்திரம் 2,3,4: பணவரவு திருப்தி தரும். பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. பிள்ளைகளால் நன்மை அடைவீர்கள்.
அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பெண்கள் சாதுார்யமான பேச்சின் மூலம் வெற்றி காண்பர். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டு. உழைப்பின் மூலம் நன்மை பெறுவீர்கள்.
சித்திரை 1,2: உங்களின் செயல்கள் பிறரை திருப்தியடைய செய்யும் வகையில் இருக்கும். முயற்சியில் வெற்றி ஏற்படும். பலவகையான யோசனைகளை கையாளும் வாரம்.

சந்திராஷ்டமம் : 7.9.2020 காலை 6:00 – 8.9.2020 மதியம் 2:06 மணி

சுக்கிரன், சந்திரன் நன்மை அளிப்பர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
சித்திரை 3,4: முக்கியஸ்தர் ஒருவரின் உதவி கிடைக்கும். எதிலும் விடா முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமை வெளிப்படும்.
சுவாதி: குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்களின் வருகை இருக்கும்.
விசாகம் 1,2,3: உங்களின் அந்தஸ்து கூடும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். பணியாளர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 8.9.2020 மதியம் 2:07 – 10.9.2020 நள்ளிரவு 12:11 மணி.

குரு, புதன், சுக்கிரன் அபரிமித நன்மை புரிவர். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.
விசாகம் 4: அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். பணியாளர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவர்.
அனுஷம்: எடுத்த விஷயங்களை திறம்பட செய்வீர்கள். புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு திருப்தி அடைவீர்கள். திட்டமிட்ட முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும்.
கேட்டை: மனதில் தெளிவு ஏற்படும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

சந்திராஷ்டமம் : 10.9.2020 நள்ளிரவு 12:12 – 13.9.2020 காலை 7:51 மணி

புதன், செவ்வாய், சந்திரன் கூடுதல் நன்மை தரும் நிலையில் உள்ளனர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
மூலம்: தொழில், வியாபாரத்தில் நீண்ட நாளாக இருந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். பணியாளர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும்.
பூராடம்: பெண்களுக்குத் திறமை வெளிப்படும். உடல் நலனில் கவனம் தேவை. மனதில் இருந்த வீண் பயம் அகலும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
உத்திராடம் 1: எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். ஊக்கமுடன் உழைப்பீர்கள். சாதுார்யமான பேச்சால் எடுத்த முயற்சிகள் கைகூடும். புண்ணியச் செயல்களில் ஆர்வம் கூடும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம் : 13.9.2020 காலை 7:52 – நாள் முழுவதும்

சுக்கிரன், புதன், சந்திரன் அனுகூல அமைப்பில் உள்ளனர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம்.
திருவோணம்: வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனைகளை ஏற்காமல் இருப்பது மனவருத்தத்தை தரலாம். கணவன், மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அவிட்டம் 1,2: பெண்கள் எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். விருந்தினர் வருகை உண்டு.

குரு, புதன், செவ்வாய் அருமையான நன்மைகளை அளிப்பர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: எல்லோரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகும். மனக்கஷ்டம் ஏற்படும். மற்றவர்களின் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயமும் சற்று நிதானமாக நடக்கும்.
சதயம்: எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் செலவு கூடும். பணியாளர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: திடீர் பயணம் உண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

புதன், சுக்கிரன், ராகு மிகுந்த நன்மை புரிவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: பணியிடத்தில் பிறரை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் பணியாளர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவி இடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம்.
உத்திரட்டாதி: பிள்ளைகளின் அறிவைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எடுத்த விஷயங்கள் வெற்றி அடைய சற்றுத் தாமதம் ஏற்படும்.
ரேவதி: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.