இந்தியாவில் மீண்டும் ஓர் கூட்டுப் பாலியல்… ராஜஸ்தானில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!

0
69

நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது உ.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம். இந்த சம்பவத்தின் சூடே இன்னும் குறையாத நிலையில், அதற்குள் மேலுமொரு பெண் அதே மாநிலத்தின் வன்புணார்வு செய்யப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், இதற்கு நீதி கேட்டு நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சிற்றூர்கள் முதல் மாநகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில் உள்ள சிஸ்வாலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 1ஆம் தேதி இந்தப் பெண் காணாமல் போயுள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி திரும்பி வந்த இவர் தான் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறை விசாரணையைத் தொடக்கியுள்ளது. குற்றவாளிகள் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட பெண்களைக் கொல்வதும் மற்றொரு பெருங்கவலையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக, கூட்டுப்பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

பசுக்களைக் காப்பதே எங்கள் பணி, பெண்களை அல்ல: யோகி ஆதித்யநாத் சொன்னாரா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் ஒரு பாதுகாப்பற்ற சமூகத்தின் குறியீடு. இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக உருமாறிக்கொண்டிருப்பதாக அறிஞர்கள் பலரும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், உலக நாடுகள் முத்திரை குத்தும் முன்பாக மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட்டு பாலியல் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல் வேண்டுகோளாக இருக்கிறது.