இந்திய மீனவர்களுடன் நடுக்கடலில் இருந்த 9 யாழ்ப்பாணத்து நபர்களுக்கு நேர்ந்த கதி

0
34

வடமராட்சி கிழக்கு குடாரப்பில் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணிய 9 பேர் கொடிகாம்ம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 51 பேர் குடாரப்பு கடலட்டை வாடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 29/09/2020 அன்று கடலட்டை பிடிப்பதற்க்காக சுமார் 12 கடல் மைல் தொலைவிற்கு சென்று, அங்கு வந்திருந்த இந்திய மீனவர்களின் படகிலேறி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் உணவருந்தி உறவாடியிருந்த ஒன்பது பேருமே விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார், சிலாபம், புத்தளம், பகுதியை சேர்ந்தவர்களே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக உள்ளூர் மீனவர்களின் பலத்த எதிர்ப்பிற்க்கு மத்தியில் குடாரப்பு பகுதியில் வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் நேற்றைய தினம்(2) பொலிசார், இராணுவம், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு யாரும் வெளியேறாமலும், உட் செல்லாமலும் தடுக்கப்பட்டுள்ளனர்.