இந்த மாதம் உங்களுக்கு எப்படி அமைந்துள்ளது என்று தெரியுமா? இந்த ராசியினர் மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க!

0
3034

மேஷம்

ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானத்தில் சூரிய பகவானும், 12ல் செவ்வாய் பகவானும் இருப்பதால் எந்த செயலை செய்தாலும் அதில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

இந்த மாதத்தில் தொழிலில் போட்டி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையை முடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவீர்கள். சுப காரிய முயற்சிகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

சிவன், முருகப்பெருமானையும் வழிபடுவதால் செயல் வெற்றி அடையும்.

சந்திராஷ்டமம் – 25 ஆகஸ்ட் காலை 08.15 மணி முதல் 27 ஆகஸ்ட் பகல் 12.38 மணி வரை இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ராசிக்கு 3ல் சூரியனும், 11ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும் அமைப்பு. இதனால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு தடை வந்தாலும் அதை சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.

ராகு 2ம் இடத்திலும், கேது 8லும் இருப்பதால் உறவுகளிடையே அனுசரித்து செல்வது அவசியம். உத்தியோகஸ்தர்கள் வேலையை கவனமுடன் முடிப்பது அவசியம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முடிவுகள் நன்கு ஆலோசிக்கப்பட்ட பின் எடுப்பது நல்லது.

எந்த ஒரு வேலையிலும் சொல்,செயலில் கவனமாக இருப்பது அவசியம். மனக் குழப்பமும், மன அமைதியின்மையும் இருக்கும். அதனால் பதற்றத்தைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

லட்சுமி நாராயணரை வழிபடுவதால் நற்பலன்கள் பெற முடியும்.

மிதுனம்

ராசிக்கு 2ல் சூரியனும், 10ல் செவ்வாயும் இருப்பதோடு, மாதத்தின் பிற்பாதியில் 3ம் இடம் சூரியன் மாறுவது உன்னத அமைப்பாகும்.

இந்த மாதத்தில் எல்லா விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் இலக்கை முடிக்க நல்ல வாய்ப்பு அமையும், தொழில் முதலீடு செய்பவர்கள் நன்கு யோசித்து செய்வது அவசியம். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த மாதத்தில் பொருளாதார வளமும், உடல் பலமும் கூடும். முன்னேற்றமான சூழல் இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சியில் இறங்கவும். உங்களின் அசையும், அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

துர்க்கை அம்மன் வழிபாடு நம்பிக்கையையும், பலமும் ஏற்படும்.

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் 2ம் தேதி 12.55 மணி முதல் 4ம் தேதி இரவு 08.45 மணி வரையும், மற்றும் ஆகஸ்ட் 29 இரவு 07.13 மணி முதல் செப்டம்பர் 01 அதிகாலை 03.49 மணி வரை உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை.

கடகம்

ராசியில் சூரியனும், குரு 6லும் சஞ்சரிப்பதன் காரணமாக கோபத்தை குறைத்து பொறுமையை கையாள்வது அவசியம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடி இருக்கும். மற்றவர்களின் தவறுக்கு வீண் பழி ஏற்க வேண்டி வரும். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வீண் விரயங்களை சந்திக்க வேண்டி வரும். ராகு – கேதுவின் நிலையால் உற்றார் உறவினரிடையே மனக்கசப்பு ஏற்படக்கூடும். சனி பகவானும், உங்கள் ராசியில் இருக்கும் சூரியனுக்கு எதிரில் இருப்பதால் ஆவணி மாதம் ஆரம்பிக்கும் வரை பலன் சுமாராக தான் இருக்கும்.

சொல், செயலில் கவனம் தேவை. கோபத்தை குறைத்து, குணத்தை அதிகரிப்பதால் எதிலும் நற்பெயர் கிடைக்கும்.

சிவ வழிபாடு செய்வதால் மன நிம்மதி கிடைக்கும்.

ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 08.45 மணி முதல் 07ம் தேதி காலை 06.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம்

சிம்மம்

ராசிக்கு 12லும் மாதத்தின் பிற்பகுதியில் ராசி நாதன் சூரியன் சஞ்சரிக்க உள்ளது மிக உன்னத அமைப்பாகும். அதே போல் 6ல் சனி, 11ல் ராகு இருப்பதோடு, ராசி மீது குருவின் பார்வை விழுவதால் நற்பலன்கள் நிறைய கிடைக்கும். நினைத்த காரியங்கள் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் கடின வேலைகள் எளிதாக முடியும். பூர்விக சொத்து சார்பாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கணபதியை வணங்கி வர வல்வினைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 7 காலை 06.58 மணி முதல் 09ம் தேதி இரவு 07.05 மணி வரை.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் தெரியுமா?

கன்னி

கன்னி ராசியினர் இந்த மாதம் மிக நல்ல பலன்கள் கிடைக்கக் கூடும். சுக்கிரன் கர்ம ஸ்தானத்தில் இருப்பதும் சூரியன் தன ஸ்தானத்திலும், பின்னர் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு மிக சிறப்பாக இருக்கும்.

இதன் மூலம் குடும்ப தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும். தொழிலில் போட்டிகள் அதிகமாக இருந்தாலும், அதை சமாளித்து முன்னேறுவீர்கள். அதே போல் வியாபரத்தில் நல்ல லாபம் அடையும். உத்தியோகஸ்தர்கள் சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும், சுப காரியங்கள் நடந்தேறும்.

முருக வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 09 இரவு 07.05 மணி முதல் 12ம் தேதி காலை 07.35 மணி வரை.

ராகு கேது பெயர்ச்சி 2020: இதில் கேது பகவான் ஒவ்வொரு ராசிக்கும் அளிக்கும் சிறப்பு பலன் இதோ!

துலாம்

ராசி அதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திலும் சூரிய கர்ம ஸ்தானத்திலும், பின்னர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் உங்களுக்கும், உங்கள் கருத்துக்கும் ஆதரவு கூடும். இதுவரை இருந்த பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவும், உதவிகரமாக இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்து வர நம்பிக்கையும், நன்மையும் உண்டாகும்.

ஆகஸ்ட் 12 ம் தேதி காலை 07.35 மணி முதல் 14ம் தேதி மாலை 06.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன் 9, 10ம் இடத்தில் இருப்பதும், குரு 2ம் இடத்தில் இருப்பதும் நல்ல அனுகூலமான பலன்களைத் தரும். இதன் மூலம் நல்ல வாய்ப்பும், வருவாயும் தேடி வரும். இதனால் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். இருப்பினும் ராகு, சுக்கிரன் 8ம் இடத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சில எதிர்பாராத பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்த லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். துணையுடனான நெருக்கும் கூடும்.

காந்தனை வழிபட கஷ்டங்கள் ஓடிவிடும்.

சந்திராஷ்டமம் :

ஆகஸ்ட் 14 மாலை 06.05 மணி முதல் 17ம் தேதி அதிகாலை 00.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

தனுசு

ஜென்ம ராசியில் குருவும், சூரியன் 8ம் இடத்திலும், சுக்கிரன், ராகு 7ம் இடத்தில் இருப்பதால் சற்று சாதகமற்ற நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளி உணவுகளை தவிர்ப்பதால் தேவையற்ற உடல் உபாதைகளைத் தவிர்க்க முடியும்.

எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சில நேரங்களில் திடீர் பயணங்கள் செய்ய வேண்டி வரும். இதனால் அசதி, அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும், மந்தநிலை நீடிக்கும். சோர்ந்து போக வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியை செய்து முடிக்க முயல்வது அவசியம்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்காமல் இருப்பது நற்பலனைத் தரும்.

சிவ வழிபாடு செய்து வர மன அமைதியும், காரிய சித்தியும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : ராசிக்கு ஆகஸ்ட் 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19ம் தேதி அதிகாலை 04.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மகரம்

ராசிக்கு 7,8ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதும், செவ்வாய் 3ம் இடத்தில் இருப்பதும் நல்ல பலனைத் தரக்கூடிய அமைப்பாகும். இருப்பினும் உடல் நலனில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த விஷயத்திலும் நிதானித்துச் செயல்படுவது அவசியம். பேச்சிலும், செயலிலும் பொறுமையும், நிதானமும் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.இதன் மூலம் தேவையற்ற விரயங்கள் தவிர்க்க முடியும்.

உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிரிகள் அதிகரிப்பார்கள், போட்டிகள் கூடினால் நல்ல பலனும், லாபமும் ஏற்படும்.

சிவ வழிபாடு செய்து வருவது நல்லது.

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை 04.10 மணி முதல் 21ம் தேதி அதிகாலை 05.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், இந்த நாட்களில் கவனம் தேவை.

கும்பம்

ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 6-ம் இடத்திலும், பின்னர் 7ல் சஞ்சரிப்பதும், 5ம் இடத்தில் சுக்கிரனும், 11ல் கேது இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர் உங்களுடன் சுமுகமாக இருப்பார். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளை கவனமாக செய்து முடிக்கக்கூடும்.

பணம், பொருள் கொடுக்கல் வாங்கலில் அனுகூல நிலை இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் சொல், செயலுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் நல்ல மதிப்பு மரியாதை உண்டாகும்.

ஆரோக்கியத்தில் இருந்த தடுமாற்றம் நீங்கி உடல் நலம் மேம்படும். துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்னியம் ஏற்படும்.

முருகனையும், அனுமனை வழிபட்டு வருதல் நல்லது.

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் 21 அதிகாலை 05.15 மணி முதல் 23ம் தேதி காலை 06.05 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

மீனம்

ராசிக்கு 6, 7ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதும், 4ல் சுக்கிரனும், ராகுவு இருப்பதால் பல நல்ல பலன்களை மீன ராசியினர் பெற உள்ளனர்.

உறவினர்கள், நண்பர்களை அனுசரித்து செல்வது அவசியம். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வதும், எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் அவர்களின் தடைகளை தகர்த்து முன்னேற்றம் அடைவார்கள். போட்டிகளை வெல்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நற்பெயர் பெற வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் இருந்த மனஸ்தாபம் நீங்கி நல்ல ஒற்றுமை இருக்கும். சுப காரிய நிகழ்வுகள் நடக்க வாய்ப்புக்கள் அமையும்.

ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வர தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். காரியத்தில் வெற்றி ஏற்படும்.

சந்திராஷ்டமம்

ஆகஸ்ட் 23 காலை 06.05 மணி முதல் 25ம் தேதி காலை 08.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.