இந்த வருடம் முழுவதும் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாது… அமைச்சர் அறிவிப்பு!

0
8

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை பெற்று எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்கக விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வழமையான விமான பயணங்களுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள குளிரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உட்பட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைய கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமைக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் போது விமான நிலையங்களை திறந்த பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.