இந்த 4 ராசியை சேர்ந்த ஆன்கள் மட்டும்தான் மனைவியின் சொல் கேட்டு நடக்கக் கூடியவர்களாம்!

0
986

திருமணம் என்பது ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமல்லாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது எனத் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில ராசி ஆண்கள் தங்களின் மனைவியின் பேச்சைத் தட்டாமல், அவர்களுக்கு சில நேரம் அடிமையாக கூட நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். ஜோதிடத்தின் படி எந்த ராசி ஆண்கள் இப்படி திருமண வாழ்வில் மனைவிக்கு அடிபணிந்து நடப்பார்கள் என்பதைப் பார்ப்போம்…

சமூகத்தில் ஒருவருக்கான துணையைத் தேடிக்கொள்ளும் ஒரு சடங்கு முறை தான் திருமணம். இந்த திருமணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது மட்டுமல்லாமல், எந்த ஒரு தருணத்திலும் துணையை விட்டுக் கொடுக்காமலும், துணையின் பேச்சை தட்டாமல் நடந்து கொள்வதால் இந்த பந்தம் காலம் காலமாக தொடரக்கூடியதாக, அன்பு, பாசமும் கலந்ததாக இருக்கும். இதனை நம் முன்னோர்களும், நம் பெற்றோர்களும் கடைப்பிடித்ததால் தான் இன்றும் வெளிநாடுகளைப் போல் இல்லாமல் இன்றும் சமூகத்தை இயக்கக் கூடிய திருமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்க சிலரின் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவியின் பேச்சுக்கு அடங்கிப் போவதும், மனைவி கணவனின் பேச்சுக்கு அடங்கிப் போகும் குடும்பங்களைப் பார்த்திருப்போம். ஜோதிடத்தின் படி, மனைவியின் பேச்சுக்கு அடங்கிப் போகக் கூடிய சில ராசிகள் யார் என்பதைப் பார்ப்போம்…

மீனம்
மீன ராசி ஆண் சகிப்புத் தன்மையை அதிகம் கொண்டவர். இவருக்கு அதிகம் பேசுவது பிடிக்காது என்பதோடு, மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்கக்கூடியவர். அதனால் தன் மனைவியின் பேச்சுக்கு பெரும்பாலும் தலை அசைக்கும் நபராக இருப்பார்.

திருமணமான பிறகு, அவர்கள் தங்கள் மனைவியிடம் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் இறக்கி வைக்கக் கூடியவராக இருக்கிறார். மேலும் முக்கியமாகத் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பதில் தான் என்பதை நம்பக்கூடியவராக இருக்கிறார்.

மனைவி குடும்பத்தில் விட்டுக் கொடுக்காமல். அடம்பிடிக்கக் கூடியவராக இருந்தால் மட்டுமே இவர்களின் வாழ்க்கையில் பிரச்னை வருமே தவிர மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலிக்கும். இவர்கள் தாய்க்கு எவ்வளவு முக்கியத்துவம், மரியாதை அளிக்கின்றனரோ அதே அளவு மனைவிக்கும் முழு மரியாதை அளிக்கக் கூடியவர்கள்.

இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!

கும்பம்
கும்ப ராசிக்கு திருமணம் என்பது ஒரு புனிதமான பிணைப்பு. எனவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் உறவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மனைவியுடன் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

தங்கள் உறவை வலுப்படுத்த மனைவியுடன் ஒருமித்த கருத்தில் இருப்பார்கள். அதே போல் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் மனைவியுடன் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுமட்டுமல்லாமல் மனைவி வருத்தப்பட்டால், அதை உடனடியாக தீர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.

மகரம்
சனி பகவான் அதிபதியாக கொண்ட மகர ராசியினர் அவர்களுக்கு விரும்பியபடி செய்யக் கூடியவர்கள். ஆனால் திருமணமான பிறகு அவர்களின் அணுகுமுறை மாற்றம் காணும். அவர்கள் தங்கள் நல்லதை, கெட்டதையும் தங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தங்கள் துணைக்காக அதிக அர்ப்பணிப்பு செய்வார்கள். எனவே அவரது திருமண வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், அவர்களின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பேச்சை கேட்டு நடப்பவர்களாக மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர்களாக, மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் ஆளுமை பொருந்தியவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் தன்னுடைய மனைவிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். முடிந்தவரை அவர் தனது மனைவிக்கு முழு நேரத்தை ஒதுக்கி அவருடன் நேரத்தை செல்விட விரும்புவார்.

எந்தளவு சிம்ம ராசியினர் தங்களின் மனைவியை நேசிக்கிறாரோ, அதை விட அதிகமாக மனைவி கணவனை நேசிக்கக் கூடியவராக இருப்பார். இருப்பினும் மனைவியின் பேச்சுக்கு பெரும்பாலும் எதிர்பேச்சு இருக்காது என்பதால் இந்த ராசியினரை திருமணத்திற்குப் பிறகு மனைவி அடிமைகள் என்று அழைக்கலாம்.