இன்று பிரமாண்டமாக ஆரம்பிக்க இருக்கம் பிக்பாஸ் சீசன் 4 – நாட்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான அதிகாரபூர்வ தகவல்

0
13

கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில், கலந்துகொள்பவர்களின் லிஸ்ட் நிறைய உலா வந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக யாரவது அறிமுகம் இல்லாதவர்கள் வருவார்களா? என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா சீசன்களுமே 100 நாட்கள் நடைப்பெற்றது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த முறை 80 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுகுறித்து ஹாட்ஸ்டாரின் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு டுவிட்டில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா’ என குறிப்பிட்டு ராசி பலன்கள் போன்ற ஒரு பதிவில் 105 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது.

அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிய வாய்ப்பே இல்லை எனவும் தெரிவந்துள்ளது.