இன்று முட்டை உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான கட்லெட் செய்யலாமா?

0
8

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

வேகவைத்த முட்டை – 4
உருளைக்கிழங்கு – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
தேங்காய் பால் – அரை கப்
மைதா மாவு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
ரொட்டித்தூள் – தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.

இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

சுவைாயன முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.