இயல்பு நிலைக்கு திரும்பும் சனி பகவான்… இந்த 5 ராசியினரும் மிகவும் எச்சரிக்கை… யார் யாருக்கு பேராபத்து தெரியுமா?

0
129

ராகு கேது பெயர்ச்சி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.

அதாவது மே 11ம் தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை தற்போது உள்ள மகர ராசியிலேயே வக்ர நிலையில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தார்.

செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் இயல்பான நிலைக்கு செல்வதால் சில ராசிகளுக்கு நிதி நிலைமை, குடும்பத்தில் முன்னேற்றமான நிலை என மிக சுபமான பலன்கள் தேடி வரக்கூடும்.

இந்த பலன் டிசம்பர் 26ம் தேதி நடக்க உள்ள சனி பெயர்ச்சி வரை பொருந்தும்.

மிதுனம்
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி நிறைவு காரணமாக அஷ்ட சனி நடக்கக்கூடிய மிதுன ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய காலம்.

சனி நேராக நகரத்தொடங்குவதால் வீண் செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த நேரத்தில், நீங்கள் குடும்ப விஷயங்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதே சமயம் வியாபாரம், தொழில் தொடர்பான சிக்கல்களும் உங்களை மன உளைச்சலுக்குள்ளாகும். இந்த காலத்தில் நீங்கள் வணிகத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த சனிப் பெயர்ச்சி பெரிய பாதிப்பு ஏற்படுத்தாத நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நிஹ்டி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அதில் சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாறிவரும் வானிலை காரணமாக நீங்கள் குளிர் மற்றும் காய்ச்சலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் குடும்ப பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

துலாம்
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் சில சங்கடமான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வீட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதோடு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் பண இழப்பு ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல், உங்கள் திருமண வாழ்க்கையில், பல வகையான கவலைகள் உங்களைத் தொந்தரவு ஏற்படலாம். அதனால் எதிலும் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு
பாத சனி நடக்கக் கூடிய தனுசு ராசிக்கு நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடும் மற்றும் செலவினங்களை அதிகரிக்கும். இதன் காரணமாக, உங்கள் வீட்டில் பணம் தொடர்பாக சில தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

உங்கள் பயணத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தைகள் தொடர்பான மனதளவில் பாதிப்பு ஏற்படலாம். பண பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்
ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் கும்ப ராசிக்கு திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பணி விவகாரங்களில் நீங்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.