இரு நபர்களை பலியெடுத்த கோர விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
63

மட்டக்குளியில் அண்மையில் இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதுண்டு விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட லொறி சாரதியின் இரத்தத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு 15, மட்டக்குளியில் கடந்த 2 ஆம் திகதி லொறியொன்று வீதியை விட்டு விலகி இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த 18 மற்றும் 37 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் லொறியின் சாரதியை கைதுசெய்து மேற்கொண்டு வந்த விசாரணைகளிலேயே அவரின் இரத்தத்தில் ஹெரோயின் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.