இலங்கையில் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பெண்கள்… அதிர வைக்கும் தகவல்

0
70

கொழும்பு, ராஜகிரிய ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாக நுகேகொட விசேட குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என இணையத்தளம் மற்றும் வார இறுதி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு பகிரங்கப்படுத்தப்படுகிறது.

அங்கு வரும் நபர்களுக்கு மிகவும் நுட்பமான முறையில் பெண்களை விற்பனை செய்வதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு சில நபர்களினால் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களை அந்த நிறுவனத்திற்கு அருகில் வரவழைத்து பாதுகாப்பு கமரா பயன்படுத்தி அந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பின்னர் நிறுவனத்திற்குள் அழைத்து வருவதறகு் நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.