இலங்கையில் உள்ள போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

0
44

நாட்டினுள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்து 5 லட்சம் பேரில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்திற்காக அதிகளவான பணப்பரிமாற்றம் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.