இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

0
32

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனைப் பகுதியை சேர்ந்த கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று மாத்திரம் நாட்டில் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் வெலிகந்தவை சேர்ந்த 2 தொற்றாளர்களும், ராஜாங்கனையை சேர்ந்த 5 தொற்றாளர்களும், ஹபராதுவவைச் சேர்ந்த ஒரு தொற்றாளரும், லங்காபுராவைச் சேர்ந்த ஒரு தொற்றாளரும், அடங்குவதுடன் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 4 தொற்றாளரும், குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,468 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 477 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 65 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.