இலங்கையில் நிலவவிருக்கும் வழமைக்கு மாறான காலநிலை… அனைவருக்கும் எச்சரிக்கை

0
133

ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (18) முதல் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை நாட்டை ஊடறுத்து வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் காலப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.