இலங்கையில் போதைவஸ்து பாவனையில் ஒரு லட்சம் பேரில் பாடசாலை மாணவர்களும் அடிமை – அஜித் ரோஹன

0
5
50 / 100

இலங்கையில் போதைவஸ்து பாவனைக்கு உள்ளான ஒரு லட்சம் பேரில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது சுமார் ஒரு லட்சம் பேர் போதைவஸ்துக்கு அடிமைகளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த தொகையில் இளைஞர்களும், பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், போதைவஸ்து பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சுடன் இணைந்து திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.