மிக விரைவில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு..?

0
568

உலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற நாடுகள் மிகவும் முறையாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தினாலும் கூட மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்றுக் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இவற்றுடன் ஒப்பிடும் போது எமது நாடு மிகவும் சிறியது, எவ்வித பாதுகாப்பும் இல்லை.

நாமும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிடின் கடந்த மாதங்களை போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.