இலங்கையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… 2 நாட்களில் 80 பேருக்கு தொற்று

0
7

கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 80 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 37 பேருக்கும், நேற்றைய தினத்தில் 43 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், மாலைதீவில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 6 பேருக்கும், இந்தியாவில் இருந்த வந்த 3 பேருக்கும், இந்திய கடலோடி ஒருவருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பியிருந்த 26 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 201 பேர் தொடர்ந்தும் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.