இலங்கையில் வாகனங்களின் விலை பல லட்சக்கணக்கினால் அதிகரிப்பு

0
81

இலங்கையில் வாகன விற்பனை விலை 5 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகாலத்தில் வாகன இறக்குமதி இரத்து செய்யப்பட்டமை மற்றும் இரண்டு வருடங்களுக்கு போதுமான அளவு வாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை இந்த அதிகரிப்புக்கான காரணமாகும் என ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சிறிய வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்கள் சிலவற்றை அதி கூடிய விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். அதேவேளை பெரியளவில் வாகன இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அதனை மறைத்து அதிக விலையில் விற்பனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு செய்யாத வாகனங்கள் மாத்திரம் விற்பனை செய்து வந்த விற்பனை நிலையங்கள், தற்போது பதிவு செய்த வாகனங்களையும் விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளன.

இதற்கு முன்னர் 60 – 70 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது 90 – 110 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.