இலங்கை கோட்டையில் மதிப்புமிக்க நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிப்பு…

0
10

உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படும் காலி கோட்டையின் “கறுப்புக் கோட்டையில்” புராதன மதிப்புள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான் குரே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய காலப்பகுதியில் கறுப்பு கோட்டையில் சிறைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“ஆவணங்களில் உள்ள தகவலுக்கமைய ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் இடமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

புகை காரணமாக சுவர் கறுப்பாகியுள்ளது. அதனால் தான் கறுப்புக் கோட்டை என்ற பெயர் இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. கறுப்பு கோட்டையை ஆய்வு செய்யும் போது இந்த நிலக்கரி சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காலப்பகுதி தீர்மானிக்கவில்லை என்ற போதிலும் அது போர்த்துகீசியம் அல்லது டச்சு காலத்திற்கு சொந்தமான இடமாகும்

நிலக்கரி இலங்கையில் இல்லை. இதனால் வெளிநாடு ஒன்றில் இருந்து தான் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்று தகவலுக்கமைய போர்த்துகீசியம் அல்லது டச்சு காலத்திற்கு சொந்தமான நிலக்கரி என தெரியவந்துள்ளது.

அதற்கமைய இந்த நிலக்கரியின் காலப்பகுதியை ஆராய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் தெற்கு மாகாணத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நிலான் குரே தெரிவித்துள்ளார்.