இலங்கை தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் – பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாஸன் எதிர்வுகூறல்…

0
1721

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள்..?

இலங்கையின் அடுத்த பிரதமராகக் கூடிய வாய்ப்பு அதிகளவில் மஹிந்த ராஜபக்சவுக்கே உள்ளது, அவர் அதிருப்தி தராத ஆட்சியை முன்னெடுப்பாரென இந்தியாவின் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாஸன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது ஜாதக கணிப்பீடுகளின் படி இம்முறை பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று பிரதமாராவார்.

இம்முறை தேர்தலில் மஹிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாச, இரா.சம்பந்தன், ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய ஐவரிடையே போட்டி நிலவுகின்றது.

இதில் மஹிந்த ராஜபக்சவுக்கே வெற்றி வெறும் வாய்ப்பு காணப்படுகிறது. சஜித் பிரேமதாசவுக்கு சிறிய இடைவெளியில் வெற்றிக்கு நெருங்கும் வேளையில் அது தவறிப்போகும் வாய்ப்புள்ளது.

மேலும் ரணில் அதிகபட்சமாக 15 – 23 தொகுதிகளையே கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுவார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தான் இத்தனை தொகுதிகளை கைப்பற்றுவேனென ஒரு கணக்கு வைத்திருப்பார் அதன்படியே அவர்கள் 13 – 17 தொகுதிகளை கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

மேலும் அவரது ஜாதக கணிபீட்டின்படி, சம்பந்தனின் கருத்தின் காரணமாக கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மற்றும் இரு கட்சித்தலைமைகள் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது எனக்கூறியுள்ளார்.