இலங்கை மாணவியை காரால் இடித்து கொலை செய்த நபருக்கு 10 வருட சிறை… அவுஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
172

அவுஸ்திரேலியாவின் மெர்பேர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி பலியாகக் காரணமாகவிருந்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிளேட்டன் பகுதியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இரவு சமிக்ஞை விளக்கில், பாதசாரிகளுக்கான பச்சை விளக்கெரிந்துகொண்டிருக்கும்போது வீதியை கடந்துகொண்டிருந்த இலங்கை மாணவி நிஷாலி மீது அந்தப்பகுதியால் வேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் மோதியது.

தூக்கி எறியப்பட்ட நிஷாலி, தலையில் அடி பட்ட காயம் காரணமாக அந்த இடத்திலேயே மரணமடைந்தார். ஷேன் கோக்ரேன் என்ற 37 வயது நபர், விபத்து ஏற்பட்டவுடன் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரும் அவருடன் பயணம் செய்த பெண்ணையும் பொலிசார் 5 நாட்களின் பின்னரே கைதுசெய்து இருந்த நிலையில். இன்றைய தினம் அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஷேன் கோக்ரேன், விபத்து இடம்பெற்ற பகுதிக்கான வேகக்கட்டுப்பாட்டை மீறியதுடன் சிக்னலிலும் நிற்காமல் சென்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஷேன் கோக்ரேனுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.