இலங்கை முழுவதும் 82 பேர் கைது

0
16

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், 18 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது