இளம் பெண்ணின் சடலம் சூட்கேசில் அடைப்பு… 7 நாட்களின் பின் உயிருடன் வந்ததால் பரபரப்பு

0
171

இந்தியாவில் இறந்ததாக கூறப்பட்ட இளம்பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சூட்கேஸில் இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அப்பெண் யார் என தெரியாத நிலையில், சடலத்தின் அங்க அடையாளங்களை கொண்டு பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன்போது அலிகரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய மகள் வாரிஷா என்று அடையாளம் காட்டினார்.

மேலும் மாமியாரும், கணவரும் கொடுமைப்படுத்தி தன்னுடைய மகளை கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வாரிஷாவின் கணவர் மற்றும் மாமியாரை கடந்த 28ம் திகதி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இறந்ததாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் வந்தார், இதில் அதிர்ச்சியடைந்த பொலிசார் வாரிஷாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, மாமியார் கொடுமை தாங்காமல் கடந்த 24ம் திகதி வீட்டை விட்டு சென்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண் யாராக இருக்கும் என பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.