நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இலக்கம் இதுவா? உங்களின் மர்மங்கள் இவைதான்

0
1501

எண் கணித ஜோதிடம் என்பது போல், ஒருவரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்ணை வைத்து அவர்களது குணாதிசியங்கள் அறியலாம். 0 முதல் 9 வரையிலான பத்து வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளதை வைத்து, நபர் ஒருவரின் குணாதிசியங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

1 (உதாரணமாக: 1951 to 2011):ஆண்டின் கடைசி எண் 1 என்று இருந்தால், இந்த ஆண்டில் பிறந்தவர்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுவார்கள்.ஊக்கம், பேரார்வம், போர்குணம், கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆற்றல் இவர்களிடத்தில் இருக்கும். எதையும் எளிதில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள். இவர்கள் போராடி வெற்றி பெறும் குணமுடையவர்கள்.

2(உதாரணமாக: 1952 to 2012):இவர்கள் இரட்டை குணம், இரட்டை வாழ்க்கை என கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்தவர்களிடம் ஒரு மாதிரியாகவும், பொதுவானவர்களிடம் ஒரு மாதிரியாகவும் வாழும் குணமுடையவர்கள்.இவர்களுக்கு என்று ஒரு எல்லையை வகுத்து வைத்திருப்பார்கள். இவர்களை முழுமையாக அறிந்து கொள்வது கடினம். தங்கள் வாழ்வில் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முடிவு செய்து வைத்திருப்பார்கள்.

3(உதாரணமாக: 1953 to 2013):இவர்களிடம் பல்வேறு கோணங்கள் தென்படும். இவர்கள் ஒரே விடயத்தில் பல்வேறு கோணங்களை கொண்டிருப்பார்கள். ஒரு முடிவு எடுக்க பலரிடம், பல தரப்பட்ட கருத்துக்களை கேட்டு பின்னர் முடிவு எடுப்பார்கள்.மேலும், இவர்களின் முடிவுகள் நபர்களை பொறுத்து மாறுபட வாய்ப்புகள் அதிகம்.

4(உதாரணமாக: 1954 to 2014):இவர்கள் எதிலும் மிக கவனமாக இருப்பார்கள். அனைத்து விதங்களில் இருந்தும் பிரச்சனைகள் அல்லது தாக்கங்கள் எப்படி வரும் என்பதை ஆராய்ந்து, கவனமுடன் செயல்படுவார்கள். தங்கள் எது ஊக்குவிக்கும், எது தடுத்து நிறுத்தும் என்று அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களது சொந்த கருத்தே, இவர்களது மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று எண்ணுவார்கள்.

5(உதாரணமாக: 1955 to 2015):இவர்களது குணாதிசியங்கள் தீ, நீர், பூமி, காற்று, வானம் என இயற்கையின் ஐந்து கூறுகளையும் கொண்டிருக்கும். இவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும். மனித நேயம் கொண்ட இவர்களால் எந்த நிலையையும் அடைய முடியும்.

6 (உதாரணமாக: 1956 to 2016):இவர்கள் வாழ்க்கையின் இருண்ட பகுதியை விரும்பி கையாளுவார்கள். இவர்கள் குணாதிசியத்தின் ஒரு பகுதியானது இருளை அல்லது தீமையை அல்லது எதிர்மறை செயலை வளர்த்தெடுக்கும்.இதனால் இவர்கள் நல்லவர்கள் அல்ல என்று கூற முடியாது. ஆனால், இவர்களுக்கு எதையும் அழிக்கும் சக்தி உண்டு. இதனை தீயவர்களின் மீதும் கூட இவர்கள் செலுத்த வாய்ப்புண்டு. தங்கள் பிடித்தவர்களை மிரட்டும் நபர்களை கையாள இவர்களின் குணமே, இவர்களுக்கு ஆயுதமாக இருக்கும்.

7(உதாரணமாக: 1957 to 2017):இவர்கள் இயல்பாகவே புதிரானவர்களாக இருப்பார்கள். இவர்களது முகம் சிரிப்புடன் இருந்தாலும், அதில் மர்மம் நிறைந்திருக்கும். இவர்கள் பெரும் ரகசியங்களை மறைத்து வைத்திருப்பார்கள்.இவர்களது ரகசியங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இவர்களைப் பற்றி சுற்றி இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

8(உதாரணமாக: 1958 to 2018):இவர்கள் ஆழமான கருத்துக்களை வைத்திருப்பார்கள். இவர்களிடம் யோசனைகள் நிறைந்திருக்கும். பெரும் திருப்புமுனைகளை கொண்டிருக்கும் இவர்களிடம் வெறுமனே பேசுவது செல்லுபடியாகாது.பேசுவதில் விடயங்கள் இருந்தால் மட்டுமே இவர்கள் பேசுவார்கள். இல்லையென்றால் இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அதே வேளையில், தங்களுக்கு இணையான அறிவு, கருத்தியல் கொண்டிருப்பவர்களுடன் மட்டுமே அதிகம் பேச விரும்புவார்கள்.

9 (உதாரணமாக: 1959 to 2019):இவர்கள் எதையும் நுணுக்கமாக பார்க்கும் தன்மையுடையவர்கள். மேலோட்டமாக எதையும் பார்க்கும் தன்மை இவர்களிடம் கிடையாது. அது எதுவாக இருந்தாலும் ஒன்றாகவே பார்ப்பார்கள்.இவர்களுக்கு எந்தவொரு விடயமும் கச்சிதமாக இருக்க வேண்டும். சிறப்பான ஒரு முடிவு மட்டுமே இவர்கள் திருப்திபடுத்தும்.

0(உதாரணமாக: 1950 to 2010):இவர்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதில் தங்களை பொருத்திக் கொள்வார்கள். இடத்திற்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவர்கள். இவர்கள் எதையும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆற்றல் மிகுந்த இவர்கள் கொஞ்சம் புதிரானவர்களாகவும் இருப்பார்கள்