உலக கோப்பை அரையிறுதி தோல்வி பயத்துடன் இங்கிலாந்தை எதிர்கொள்ள மாட்டோம்: ஆரோன் பிஞ்ச்

  0
  9

  உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பயத்துடன் டி20 தொடரை எதிர்கொள்ள மாட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

  மார்ச் மாதம் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையில் ஒயி்ட்பால் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்று அதிகரித்ததால் முதல் போட்டியுடன் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

  அதன்பின் ஆஸ்திரேலியா அணி இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து சென்றுள்ளது.

  ஆஸ்திரேலியா  உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பிறகு தற்போது அங்கு சென்று விளையாடுகிறது.

  இந்நிலையில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த பயத்தை சுமந்து செல்லமாட்டோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘பின்னால் திரும்பி அந்த போட்டியை பார்த்தோம் என்றால், எங்களால் ரன்கள் குவிக்க இயலாது. எங்களுடைய தொடக்க பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் கடைநிலை வீரர்கள் சேஸிங் செய்வார்கள்.

  சிறந்த அணியாக, உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும்போது, குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, அவர்கள் ஆக்ரோசமாக செயல்பட்டு எங்களது விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அது கடினமான நாள், ஆனால் டி20 மாறுபட்ட கிரிக்கெட். தோல்வியடைந்த போட்டியின் பயத்தை சுமந்து கொண்டு செல்லமாட்டோம். டி20 போட்டியில் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்’’ என்றார்.