ஊரடங்கு சட்டம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய இளைஞர் கைது

0
7

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய 18 வயது இளைஞர் மீட்டியாகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.