எங்களுக்கு ஒரு கண் அனிதா.. இன்னொரு கண் ஷிவானி… நடுவுல புதுசா இவங்க வேறை..!

0
39

வனிதாவாக அனிதா உருமாறி நின்றதை பார்த்து, அவரது ரசிகர்கள் ஆடிப்போய் உள்ளனர்.. இருந்தாலும், எங்களுக்கு ஒரு கண் அனிதா.. இன்னொரு கண் ஷிவானி என்று மவுசு குறையாமல் போட்டியாளர்களை தூக்கி வைத்து கொண்டாடியும் வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புவரை அனிதா என்ற பெண் செய்தியாளர் பற்றி அவ்வளவாக தெரியாது.. ஆனால், இவருக்கு நிறைய ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.. துறுதுறு பேச்சு, இனிமையான குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உண்டு.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் அனிதாவின் அறியாத பக்கங்கள் பற்றி பலருக்கு ஒவ்வொரு நாளும் தெரிய வருகிறது.. ஆரம்பம் முதலே நல்ல கண்டென்ட் தந்து வருகிறார்… நிஷா, சுரேஷ், ரேகா இவர்கள்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக இழுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனிதாவின் அதிரடியை யாருமே கணிக்கவில்லை.

ஆனால், கண்டன்ட் வேண்டும் என்பதற்காக இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், அது நல்ல பெயரை சம்பாதித்து தருமா என்பது தெரியவில்லை.. போட்டியாளர்களிடமும் எதைஎதையோ புலம்பி அழுகிறார்.. கேமரா முன்பு நின்று கொண்டும் புலம்பி அழுகிறார்.

இருந்தாலும் அனிதாவுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை.. அதுபோலவேதான் ஷிவானியும்.. சில பேச்சுகள் இவர் சரியாகத்தானே சொல்கிறார் என்று யோசிக்கும் வகையில் உள்ளது.. நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பேயே ஷிவானிக்கும் ஏகப்பட்ட பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.. அதனாலேயே அனிதாவும், ஷிவானியும் எங்கள் இரு கண்கள் என இவர்களது ரசிகர்கள் போற்றி வருகிறார்கள்

இதனிடையே, மற்றொரு ஸ்பெஷல் பங்கேற்பாளராக ஜீ தமிழ் டிவி காம்பயர் அர்ச்சனா, தற்போது என்ட்ரி ஆக இருக்கிறாராம்.. எப்போதுமே அர்ச்சனா நிதானமாக பேசி யாருமே பார்த்திருக்க முடியாது.. கடகடவென்று பேசுவதும், ஆன் தி ஸ்பாட்டில் கவுண்ட்டர் தருவதும் இவரது அல்ட்டிமேட்.

இதேமாதிரிதான் கடந்த சீசனில் மீரா மிதுனை உள்ளே இறக்கினார்கள்.. அப்போது முதலே ரேட்டிங் சூடுபிடித்தது.. இப்போது அர்ச்சனாவை நிகழ்ச்சிக்குள் கொண்டு வருவதால், வீடே சிரிப்பில் மூழ்குமா? அல்லது சச்சரவில் கொந்தளிக்குமா? என்பது இனிமேல்தான் தெரியும்!