பிற கட்சியினருக்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

0
500

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் நாடாளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.