எயிட்ஸ் இருப்பதை மறைத்து இருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் கைது

0
34

அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர், தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை மறைத்து இரு நபர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா டியன் பிளெமிங் எனும் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இரு நபர்களுடன் பாலியல் ரீதியான உறவை பேணுவதற்கு ரெபேக்கா சம்மதித்த போதிலும், தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் மறைத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஜியா மாநில சட்டங்களின்படி, எச்ஐ.வி. தொற்றுடையவர்கள் அது குறித்து தெரிவிக்காமல், பாலியல் உறவில் ஈடுபடுவதோ இரத்த நன்கொடை அளிப்பதோ குற்றமாகும். இதற்கு 10 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை அளிக்கப்பட முடியும்.

அம்மாநிலத்தில், பொலிஸார் மீது எச்சில் துப்பும் எச்.ஐ.வி. தொற்றாளர்களுக்கு 20 வருடங்கள் வரையான சிறைதண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்.ஐ.வி. இருப்பதை மறைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெபேக்கா இயன் பிளெமிங் 5,700 டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.