எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் சிகிச்சை கட்டணம் பற்றி வெடித்த சர்ச்சை… மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

0
152

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமுக்கு, வழங்கிய சிகிச்சை தொடர்பான சர்ச்சைகளுக்கு இன்று மதியம் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளிக்கிறது.

கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததும், அதையடுத்து அவர் மரணமடைந்த தகவலும், ரசிகர்களை உலுக்கின.

செப்டம்பர் முதல் வாரத்திலேயே எஸ் பி பாலசுப்ரமணியமுக்கு, கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டதால், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடலை வைக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கியதால், பாலசுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணமடைந்த தகவலை அவரது மகன் சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தாரே தவிர மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. மருத்துவமனை நிர்வாகம் வசூலித்த கட்டணம், சிகிச்சை முறை உள்ளிட்டவை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விமர்சனக் கருத்துக்களை வேகமாக பரவி வருகின்றன.

இது சர்ச்சைகள் தொடர்பாக இன்று மதியம் 2.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து இந்த மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க உள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது எஸ் பி பாலசுப்பிரமணியம் மகன் சரண் உடன் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் பி பாலசுப்பிரமணியமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி அப்போது மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க உள்ளது, என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.