ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஒரேயொரு மாற்றம்

0
4

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறாத நிலையில், ருத்து கெய்க்வார்ட் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. வாட்சன், 2. முரளி விஜய், 3. டு பிளிஸ்சிஸ் 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி. 11. ருத்து கெய்க்வார்டு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஸ்மித், 2. டேவிட் மில்லர், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. டாம் கர்ரன், 5. ராபின் உத்தப்பா, 6. சஞ்சு சாம்சன், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. உனத்கட், 9. ஜெய்ஸ்வால். 10. ராகுல் டெவாட்டியா, 11. ரியான் பராக்