ஒரே நாளில் அதிக பட்ச கொரோனா மரணம்… நேற்றைய தினம் இலங்கையில் பதிவானது

0
10

கொவிட்19 காரணமாக நேற்று 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது

கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் , கொழும்பு – 9 தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவருக்கு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கொவிட்19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டதை அடுத்து , அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் , புற்றுநோய் மற்றும் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலை அதிகரித்தமையாகும்.

அத்துடன் மருதானையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு – 15 ஐ சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் நீண்ட காலமாக இருந்த நுரையீரல் நோய் கொவிட்19 தொற்றினால் தீவிரமடைந்தமையாகும்.

அதேநேரம், கொழும்பு – 2 பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றுமுன் தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கொழும்பு – 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் நேற்றுமுன் தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் நீண்ட கால நீரிழிவு, பக்கவாதம் மற்றும் கொவிட்19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 13 பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் நீண்ட நாட்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா மற்றும் கொவிட்19 தொற்றினால் நியுமோனியா தீவிரமடைந்தமையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 70 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் நீரிழிவு மற்றும் கொவிட்19 தொற்றாகும் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.