கடக ராசிக்கு செல்லும் புதனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் எவை தெரியுமா?

0
264

ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவகிரகங்களில் இளவரனாகக் கருதப்படுவது புதன் கிரகமாகும். ஏனெனில் ஒருவரது அறிவுக்கும், ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் என்றால் அது புதன் தான்.

12 ராசிகளில் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி தான் புதன். ஒருவரது ஜாதகத்தில் புதன் சரியான வீட்டில் இருந்தால், அது அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், கவர்ச்சியையும் தரும்.

ஆகஸ்ட் 2, 2020 அன்று புதன் கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த புதன் பெயர்ச்சி ஒருவரின் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கும். ஆகையால், கடகத்திற்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த மாதிரியான பலன் கிடைக்கப் போகிறது என்பதைப் பற்றி தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் நன்காவது வீட்டில் புதன் செல்வதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கிரக மாற்றம் உங்களின் புத்தியையும் பேச்சையும் குறிக்கும் அதே வேளையில், நான்காவது வீடு ஆறுதலையும், தாயின் ஆரோக்கியம் மற்றும் பலவற்றைக் குறிக்கிறது.

இந்த பெயர்ச்சி உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வேலை கிடைக்கும். இருப்பினும் உங்களுக்கு சிறிது மன அழுத்தமும், அமைதியின்மையையும் சந்திப்பீர்கள்.

நீங்கள் சற்று அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் மூன்றாவது வீட்டில் செல்வதால், பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மூன்றாம் வீடு தைரியம், வலிமை, நம்பிக்கை மற்றும் பலவற்றைக் குறிக்கிறது. இந்த வீட்டிற்கு புதன் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உங்களுக்கு பல வழிகளில் வருமானத்தை வரவழைக்கும்.

இது உங்களின் நிதி நிலைமையை வலுவாக்கும் மற்றும் உங்களை நிலையானதாக மாற்றும். அதோடு உங்களின் திறமைக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்கள் குடும்பத்தினருடன் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிப்பீர்கள். முக்கியமாக இந்த காலத்தில் நீங்கள் பெயரையும், புகழையும் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் உங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறது.

இதனால் புதிய வருமானங்களுடன் ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறலாம். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது அல்லது ஒரு குழந்தையின் வருகை செய்தியைப் பெறக்கூடும்.

உங்களின் முடிவெடிக்கும் திறன் மேம்படும். இதன் காரணமாக நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறது. இதனால் இது இரண்டாவது வீட்டை பாதிக்கும்.

இரண்டாவது வீடு உங்கள் இயல்பு, ஆளுமை, குணம் மற்றும் ஆன்மாவை நிர்வகிப்பதால், நீங்கள் எந்த வேலையையும் தள்ளிப் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு வேலையையும் புறக்கணிக்காமல், வேறு எப்படி செய்யலாம் என்று யோசித்து அதை நேரத்திற்குள் முடிக்க முயற்சிக்கவும். மானவர்கள் நம்பிக்கை மற்றும் கவனச்சிதறலை எதிர்கொள்ளக்கூடும்.

உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறது. 12 ஆவது வீடு இழப்புகள், செலவுகள், தண்டனைகள் மற்றும் பிறவற்றைக் குறிக்கிறது.

எனவே இந்த மாதம் நீங்கள் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கக்கூடும் மற்றும் அமைதியற்றவராகவும் உணர்வீர்கள்.

மேலும் நீங்கள் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லலாம். எனவே நீங்கள் நல்ல புத்தகங்களைப் படிப்பது மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நல்லது. இது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.

மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் செவி சாய்த்து அவர்களின் ஆலோசனையை கணக்கில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் லாபத்தையும் வெற்றியையும் பெறக்கூடும்.

நீண்ட காலத்திற்கு முன் ஒருவரிடம் கடன் கொடுத்திருந்தால், அந்த பணம் தற்போது உங்களிடம் திரும்பும். இந்த கட்டத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புக்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், விரைவில் குணமடைந்து சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார்கள். பத்தாவது வீடு வணிகம், கர்மா, தலைமை பண்புகள் மற்றும் பணியிடத்தைக் குறிக்கிறது.

புதன் பத்தாவது வீட்டிற்கு செல்வதால், வாழ்க்கையில் விஷயங்கள் சிறப்பாக மாறும். உங்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் எதை செய்தாலும் பயனடைவீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு விஷயங்கள் சிறப்பாக நடக்கும்.

மாணவர்களுக்கு பலனளிக்கும் நேரம் இது. உங்கள் வீட்டில் பணத்தை முறையாக நிர்வகிப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது.

உங்களின் இலக்குகள் மற்றும் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உக்ள் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். நீங்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

இருப்பினும் வேலை செய்பவர்கள், கடின உழைப்புக்கான பாராட்டையும், சில வாய்ப்புக்களையும் பெறக்கூடும். மாணவர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, புதன் 8 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எட்டாவது வீடு சவால்கள், தடைகள், மூதாதையர் சொத்து, நீண்ட ஆயுள் மற்றும் வயது ஆகியவற்றைக் குறிக்கிறது.

உங்கள் தடைகள் முடிவடையும் மற்றும் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். மாணவர்களுக்கு சாதகமான நேரம்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை உங்களை கவலையடையச் செய்யும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதன் ஏழாவது வீட்டிற்கு செல்கிறார். எனவே இது உங்களுக்கு சாதகமான காலமாக இருக்காது.

உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே வாதங்கள் எழ வாய்ப்புள்ளது.

வெவ்வேறு விஷயங்களில் உங்களுக்கு பல கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவராயின், அளவுக்கு அதிகமாக யோசிப்பதை விட்டு, உங்கள் வணிகத்தை சரியான முறையில் கவனித்து செயல்படுவது நல்லது.

உடன் பணிபுரிபவர்கள் மற்றும் கூட்டாளர்களிடம் தவறுகளை கண்டறிவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, அவர்கள் எதை செய்தாலும் சிறப்பாக செயல்பட அவர்களை ஊக்குவியுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமானது என்பதை நிரூபிக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.

இது பல்வேறு வருமான ஆதாரங்கள் மூலம் பணம் பெற உதவும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுக்கு இதயப்பூர்வமான பரிசை வழங்குவார்கள்.

வேலை செய்பவர்கள், உங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சகாக்கள் உங்கள் செயல்திறன் மற்றும் கடின உழைப்பால் மகிழ்ச்சியடைவார்கள்.

உங்கள் வெற்றிகளால் எதிரிகளை வெல்வீர்கள். உங்கள் குடும்பத்துடன் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு புதன் ஐந்தாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் சவாலானதாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் செறிவு நிலை குறைவதை உணர்வீர்கள்.

இருப்பினும், உங்கள் எதிரிகளை வெல்ல உறுதியாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறையக்கூடும். இது உங்களை ஏமாற்றக்கூடும்.

இந்த நேரத்தில் தான் நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.