கடலில் நீந்திய பெண் பொலிசாரால் திடீர் கைது, இதுதான் காரணமாம்

0
14

ஸ்பெயின் நாட்டில் உள்ள, லா- சொறிபூ என்னும் கடல் கரையில், திடீரென பெண் ஒருவர் கைதாகி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் அங்கே இருந்த பலரை உலுப்பியது. அப்படி அவர் என்ன செய்து விட்டார் என்று பொலிசார் அவரை கைது செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்த மக்கள், விடையம் புரிந்த உடனே அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள். காரணம் அவருக்கு கொரோனா. கடந்த 9 நாட்களாக அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது.

அதிகாரிகள் அவரை வீட்டில் இருக்கும் படி பல முறை கூறியுள்ளார்கள். ஆனால் அந்தப் பெண் கேட்டபாடாக இல்லை. மேலும் சொல்லப் போனால் பலர் வந்து நீராடும் கடல் கரை சென்று அங்கே நீராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த அதிகாரிகள். கடல்கரைக்கே வந்து அவரை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளார்கள்.