கடலுக்குள் தீ பற்றிய “New Diamond” கப்பல் தொடர்பில் வெளியான அதிகாரபூர்வ தகவல்

0
10

இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘MT New Diamond என்ற கப்பலில் கடந்த 3ம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட பாரிய தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.

குறித்த கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்திம் இரவு 7 மணியளவில் தீப்பரவல் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.