கணவனிடமே பெண் கேட்க சென்ற கள்ளக்காதலன் – வெட்டி கூறுபோட்ட கணவன்

0
10

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (29), சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் சங்ககிரி-பள்ளி பாளையம் பிரிவு சாலையில் சென்ற போது, மர்ம நபர்களால் வழி மறிக்கப்பட்டார். அவர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றதும் அவர்களிடம் இருந்து பார்த்திபன் தப்பியோடினார். எனினும் ஓட ஓட விரட்டி கும்பல் வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சங்ககிரி புதுவளவு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மனைவி பிரியங்கா(23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இட்லி கடை நடத்தி வந்த நிலையில், பார்த்திபன் அடிக்கடி அந்த கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.

பின்னர் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர். பிரியங்காவின் கணவர் சரத்குமார் வேலைக்கு சென்ற பின்னர் அவரது வீட்டிற்கு பார்த்திபன் செல்வார். இவ்வாறு அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல், தனிமையில் உல்லாசம் அனுபவித்தது 2 ஆண்டுகள் நீடித்துள்ளது. இதனால் இருவரும் பிரியமுடியாத கள்ளக்காதல் ஜோடியாகினர். இந்நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு பிரியங்கா நீண்டநேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த சரத்குமார் விசாரித்தப்போது, , பார்த்திபனுடனான கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் மனைவியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டதால், பார்த்திபனுடன் பேச முடியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, போதையில் பிரியங்காவை தேடி அவரது வீட்டுக்கே பார்த்திபன் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த சரத்குமாரிடம், உனது மனைவியும், நானும் காதலிக்கிறோம்.

அவளை என்னுடன் அனுப்பிவை என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி பார்த்திபனை அனுப்பிவைத்தனர். சரத்குமார் இதுகுறித்து மனைவி பிரியங்காவின் தந்தை, அவரது சகோதரரிடம் கூறியுள்ளார்.

அவர்கள் மூன்று பேரும் திட்டம்போட்டு பார்த்திபனை ஓட ஓட விரட்டி கொலை செய்தது தெரியவந்தது. பிரியங்காவின் கணவர் சரத்குமார், தந்தை தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான அவரது சகோதரை தேடி வருகிறது பொலிஸ்.