கண்டி நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு

0
9

கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் சிறிய அளவில் நில அதிர்வு உணரப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று குறித்த பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளது.

அனுரகம, ஹாரகம, சிங்ஹாரகம, ஒயிலபிடிய மற்றும் மேலும் சில பகுதிகளிலேயே சிறியளவிலான அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இப்பகுதியில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.