கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா

0
12

களனி பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

சமூக விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்த மாணவி மினுவாங்கொடை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரின் தந்தை மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர் எனவும் களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் விஜயானந்த ரூபசிங்க குறிப்பிட்டார்.

மாணவியின் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவி தங்கியிருந்த விடுதியிலிருந்த மேலும் இருவருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைகழகத்தின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த 04 ஆம் திகதி பல்கலைக்கழகம் மூடப்பட்ட போதும், குறித்த மாணவி கடந்த 30 ஆம் திகதியே இறுதியாக பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அவருடன் பழகிய 11 பேருக்கு ஆரம்பகட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் களனி பல்கலைகழகத்தின் ஊடகப்பிரிவு பணிப்பாளர் விஜயானந்த ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.