காலி நோக்கி பயணித்த பேருந்தில் கொரோனா தொற்றாளர் அடையாளம்..

0
27
7 / 100

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் பேருந்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இதன் காரணமாக அந்த பேருந்தின் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் 19 பேர் வீட்டினுள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் வெனுர கே சிங்காரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தில் இந்த கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பயணியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.